Home 13வது பொதுத் தேர்தல் சபா உள்ளூர் கட்சிகளுக்கும் பக்காத்தானுக்கும் இடையே சுமுகமான தொகுதி உடன்பாடுகள்!

சபா உள்ளூர் கட்சிகளுக்கும் பக்காத்தானுக்கும் இடையே சுமுகமான தொகுதி உடன்பாடுகள்!

467
0
SHARE
Ad

Pakatan-Logo-Featureகோலாலம்பூர், ஏப்ரல் 18- பிகேஆர், ஜசெக மற்றும் பாஸ் கட்சிகளை உள்ளடக்கிய மக்கள் கூட்டணி  சபா உள்ளூர் கட்சிகளுடன் சமரசம் செய்துகொள்வதன் மூலம் 60 சட்டமன்ற மற்றும் 25 பாராளுமன்றத்திற்கான தொகுதிகளில் போட்டியிடுவதோடு தேசிய முன்னணிக்கு தங்களின் கட்சிகள் ஒன்றுடன் ஒன்றுடன் மோதிக் கொண்டு போட்டியிடும் சூழலைத் தவிர்த்திருக்கிறது.

முன்னதாக காப்பாயான் சட்டமன்றம் மற்றும் தாவாவ் நாடாளுமன்றத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்த பிகேஆர், ஜசெக  ஆகிய இரு கட்சிகளும் தங்களுக்குள் சமரசம் செய்துகொண்டு ஆளுக்கொரு தொகுதியில் போட்டியிடுகின்றன.

பிகேஆரின் நட்புக் கட்சியான சபாவின் ஏபிஎஸ் கட்சியின் தலைவர் வில்பிரெட் பும்புரிங் துவாரான் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் 2008ல் தேசியமுன்னணி சார்பாக போட்டியிட்டு, வென்று பின்பு கடந்த வருடம் தனது கட்சியை பிகேஆர் ஆதரவுக்கட்சியாக அறிவித்தார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையே கோத்தாகினபாலுவில், சபா ஜசெக தலைவர் ஜிம்மி வோங் கட்சியின் மாநில ஆலோசகருக்குப் பதிலாக தேசியமுன்னணியை எதிர்த்துக் களம் காண்கிறார்.

பிகேஆர் மும்முனைப்போட்டியை எதிர்நோக்குகிறது.

பிகேஆர் துணைத்தலைவர் அஸ்மின் அலியும், ஜசெக பொதுச்செயலாளர் லிம் குவான் எங்கும் இன்று தனித்தனியே தங்கள் கட்சி போட்டியிடும் இடங்களை அறிவித்தனர். பிகேஆர் 19 நாடாளுமன்றம் மற்றும் 43 சட்டமன்றங்களிலும், டி ஏ பி 4 நாடாளுமன்றம் மற்றும் 8 சட்டமன்றங்களிலும் போட்டியிடுவதாக அறிவித்திருக்கின்றன.

ஏபிஎஸ் மற்றும் பிபிபிஎஸ் கட்சிகள் முறையே 5, 4,நாடாளுமன்றம் மற்றும் 15,-14 சட்டமன்றங்களிலும் போட்டியிடுகின்றனர். இவர்கள் பிகேஆர் சின்னத்தில் போட்டியிடுவார்கள்.

இதற்கிடையே பிகேஆர் மற்றும் சபாவின் எஸ்ஏபிபி யின்  அதிருப்தியாளர்கள் போட்டி கொடுக்க நேரிட்டால் இக்கட்சிகள் மும்முனைப் போட்டியை சந்திக்க நேரிடும். இருப்பினும் பெரும்பான்மையான இடங்களில் இணக்கமான போக்கே காணப்படுவதால் சபாவில் தேசிய முன்னணி பெரிய சவாலையும், பிகேஆர் கூட்டணி வெற்றி பெறும்  வாய்ப்பையும் எதிர்நோக்கியுள்ளது.