Home One Line P1 அன்வார் சாஹிட்டுக்கு ஆசிரியராக இருப்பதில் என்ன தவறு?

அன்வார் சாஹிட்டுக்கு ஆசிரியராக இருப்பதில் என்ன தவறு?

470
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் “அரசியல் ஆசிரியர்” என்பதை அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி ஒப்புக்கொள்வதில் எந்த பிரச்சனையும் இல்லை என்று உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடின் தெரிவித்தார்.

அகமட் சாஹிட் மற்றும் அன்வார் இடையேயான உரையாடலின் குரல் பதிவு தொடர்பாக செய்யப்பட்ட காவல் துறை புகாரை தனது தரப்பு விசாரிக்கும் என்று அவர் கூறினார்.

“நிச்சயமாக நாங்கள் ( உள்துறை அமைச்சு) எங்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து அறிக்கைகளையும் விசாரிப்போம். முதலில் நம்பகத்தன்மை உள்ளதா என்று பார்ப்போம். உரையாடல் இல்லாவிட்டால், அவதூறு என்று அர்த்தம். உண்மையாக இருந்தால், நானும் கேட்டேன். அன்வார் சாஹிட்டுக்கு ஆசிரியராக இருப்பதில் என்ன தவறு, ” என்று தலைநகரில் இன்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் கூறினார்.