இதில் 1,268 பேர் உள்நாட்டினர் 17 பேர் வெளிநாட்டினிலிருந்து திரும்பியவர்கள் ஆவர். இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 355,753 ஆக அதிகரித்துள்ளன.
இன்றைய நிலையில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 14,203 ஆகும். சிகிச்சை பெற்று வருபவர்களில் 186 பேர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்படுகிறது. அவர்களில் 81 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.
இன்று 4 பேர் மரணமடைந்ததைத் தொடர்ந்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 1,308- ஆக உயர்ந்துள்ளது.
மாநிலங்கள் அளவில் மிக அதிகமான சம்பவங்கள் 374 என்ற எண்ணிக்கையில் சிலாங்கூரில் பதிவாகி உள்ளன. சரவாக்கில் 211 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.