Home One Line P1 ‘சூர்யா 40’ முதல் தோற்றம் வெளியீடு

‘சூர்யா 40’ முதல் தோற்றம் வெளியீடு

1400
0
SHARE
Ad

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் சூர்யா 40 படத்தின் முதல் தோற்றம் இன்று வெளியிடப்பட்டது.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. இத்திரைப்படத்தை இயக்குனர் பாண்டியராஜ் இயக்கி வருகிறார். இந்நிலையில் இந்தப் படத்தின் முதல் தோற்றத்தை தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக சூர்யாவிற்கு இசையமைக்க இருக்கிறார் டி.இமான்.

#TamilSchoolmychoice

சூர்யா 40 படத்தில் சத்யராஜ், வினய் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.