Home One Line P1 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பயன்படுத்தலாமா என்பது 2 வாரத்தில் தெரியும்

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பயன்படுத்தலாமா என்பது 2 வாரத்தில் தெரியும்

580
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இரண்டு வாரங்களில் தடுப்பூசி வழங்கல் அணுகல் உத்தரவாத சிறப்புக் குழு (ஜே.கே.ஜே.வி) கூட்டத்தில் அஸ்ட்ராசெனெகா கொவிட் -19 தடுப்பூசியைப் பயன்படுத்தலாமா என்பது குறித்து அரசாங்கம் முடிவு செய்யும் என்று கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்னர் சுகாதார அமைச்சின் வல்லுநர்கள் குழுவால் தாக்கல் செய்யப்பட வேண்டிய கூடுதல் தகவல்களை அரசாங்கம் ஆராயும் என்று தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒருங்கிணைப்பு அமைச்சருமான அவர் தெரிவித்தார்.

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசி பயன்பாடு மற்றும் இரத்த உறைவு சம்பவங்களுக்கு இடையே தொடர்பு இருப்பதை முதன்முறையாக உறுதிப்படுத்திய ஐரோப்பிய மருந்துகள் அமைப்பின் (ஈ.எம்.ஏ) அறிக்கையை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொண்டதாக அவர் கூறினார்.