Home One Line P1 அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பயன்படுத்துவதை மலேசியா மதிப்பாய்வு செய்யும்

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியைப் பயன்படுத்துவதை மலேசியா மதிப்பாய்வு செய்யும்

535
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஐரோப்பிய மருந்துகள் அமைப்பின் (ஈ.எம்.ஏ) கண்டுபிடிப்புகளைத் தொடர்ந்து அஸ்ட்ராசெனெகா கொவிட் -19 தடுப்பூசியைப் பயன்படுத்துவதை மலேசியா மதிப்பாய்வு செய்யும்.

இது அசாதாரண இரத்தக் கட்டிகளை உள்ளடக்கிய பக்க விளைவுகளை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின், அவ்வமைப்பின் அறிவிப்பை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொண்டதாகக் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

செவ்வாயன்று, ஐரோப்பிய மருந்துகள் அமைப்பின் தலைவர் மார்கோ கவாலேரி, “நாங்கள் இப்போது இதைச் சொல்லலாம். தடுப்பூசியில் பக்கவிளைவு உள்ளது தெரிகிறது. ஆனால் இந்த எதிர்வினைக்கு என்ன காரணம் என்று எங்களுக்கு இன்னும் தெரியவில்லை. ” என்று கூறியுள்ளார்.

சமீபத்திய வாரங்களில் குறைந்த எண்ணிக்கையிலான பெறுநர்களில் அரிதான இரத்த உறைவு நிகழ்வுகளின் பின்னணியில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. சில ஐரோப்பிய நாடுகள் கடந்த மாதம் அதன் பயன்பாட்டை நிறுத்திவைத்தன.

மலேசியா 3.2 மில்லியன் மக்களின் பயன்பாட்டிற்காக மே மாதத்தில் சுமார் 6.4 மில்லியன் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைப் பெற திட்டமிடப்பட்டுள்ளது.