Home One Line P2 அமெரிக்க தூதர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலுக்கு வருகை

அமெரிக்க தூதர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலுக்கு வருகை

930
0
SHARE
Ad
படம்: அமெரிக்க தூதரகம் டுவிட்டர் பக்கம்

கோலாலம்பூர்: மலேசியாவுக்கான அமெரிக்க தூதர் மெக்பீட்டர்ஸ் கோலாலம்பூரில் மஸ்ஜிட் நெகாரா உட்பட ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில், மற்றும் சின் சே சி சே யா சீனக் கோயில்களுக்கு நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 8) வருகை தந்துள்ளார்.

ஸ்ரீ மகா மாரியம்மன் கோயிலுக்கு வருகை தந்த அவரை ஆலயத் தலைவர் டான்ஸ்ரீ நடராஜா வரவேற்றார்.

இந்த வருகையின் போது, மலேசியாவின் நீண்ட மத வரலாறு குறித்தும், மத சமூகங்கள் எவ்வாறு ஒன்றிணைந்து பரஸ்பர மரியாதையை நிலைநிறுத்தி வருகிறார்கள் என்பதையும் பற்றி மேலும் அறிந்து கொண்டதாக அமெரிக்க தூதரக டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.