Home One Line P1 கம்போங் மாணிக்கம்: 14 கடைகள் சட்டத்திற்கு உட்பட்டு இடிக்கப்பட்டன

கம்போங் மாணிக்கம்: 14 கடைகள் சட்டத்திற்கு உட்பட்டு இடிக்கப்பட்டன

700
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பாங்கி லாமாவில் உள்ள கம்போங் மாணிக்கத்தில், செவ்வாய்க்கிழமை இடிக்கப்பட்ட 14 வணிக இடங்கள் தனியார் மற்றும் மாநில அரசு இருப்பு நிலத்தில் இயங்கி வந்ததாக எங் சே ஹான் தெரிவித்தார்.

இடிக்கப்பட்ட கட்டமைப்புகள் உணவகங்கள், கடைகள், மற்றும் கார் கழுவுமிடங்களைக் கொண்டிருந்தன. அவற்றில் சில பாழடைந்து நன்கு பராமரிக்கப்படவில்லை என்று ஊராட்சி மற்றும் பொது போக்குவரத்திற்கான சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் எங் கூறினார்.

“சட்டவிரோத மின் இணைப்புகளைத் தவிர்த்து, சாலையின் நுழைவு மற்றும் வெளியேறும் இடத்திற்கு (சுமார் 10 மீட்டர்) மிக அருகில் அமைந்திருந்த இந்த வணிகங்கள் பயனர்களுக்கு ஆபத்தை விளைவிப்பதாக இருந்தன, ” என்று அவர் ஓர் ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

எவ்வாறாயினும், வணிகர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க மாநில அரசு உறுதிபூண்டுள்ளதாகவும், ஏற்கனவே பாசார் பாங்கி லாமாவில் ஒரு புதிய வணிக தளத்தை அமைத்துள்ளதாகவும் எங் கூறினார்.

“ஈ-பஜார் ராயா, சிலாங்கூர் பிளாட்பார்ம் (பிளாட்ஸ்) முதல் சமீபத்திய, நியாகா டாருல் எஹ்சன் (நாடி) திட்டம் வரை, வணிக சுற்றுச்சூழல் அமைப்பை ஆதரிப்பதில் மாநில அரசு ஊக்கத்தொகைகளை வழங்கியுள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

சம்பந்தப்பட்ட வணிகங்கள் தொடர்பான புகார்களை ஆராய்ந்த பின்னர் இந்த இடிப்பு நடவடிக்கை சட்டத்தின்படி அமைந்தது என்று அவர் வலியுறுத்தினார்.

முன்னதாக, சோசியாலிஸ் கட்சித் தலைவர் எஸ்.அருட்செல்வன், குறைந்த வருமானம் கொண்ட வர்த்தகர்களுக்கு சொந்தமான 14 கடைகள் 40 ஆண்டுகளாக இயங்கி வந்ததாகக் கூறினார்.