Home One Line P1 குரல் பதிவு: ‘அன்வார் கூறுவதில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு!’- ஜசெக

குரல் பதிவு: ‘அன்வார் கூறுவதில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு!’- ஜசெக

674
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அண்மையில் ஏற்பட்ட குரல் பதிவு சர்ச்சை குறித்து அன்வார் இப்ராகிமின் மறுப்பை ஜசெக ஏற்றுக்கொண்டதுடன், பிகேஆருக்கு ஊழல் தலைவர்களுடன் அரசியல் ஒத்துழைப்பு இருக்காது என்ற நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளது.

நம்பிக்கை கூட்டணிக்கு வெளியில், எந்தவொரு ஒத்துழைப்பும் ஜசெக கொள்கைகளுக்கு மாறாக இருக்காது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் புரிந்துகொள்வார் என்று அந்தோனி லோக் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“அன்வார் பகிரங்கமாக மறுத்துவிட்டார். நாங்கள் அன்வார் மீதான நம்பிக்கையில் பதிலை ஏற்றுக்கொள்கிறோம். ஊழல் மற்றும் பலவற்றில் தண்டனை பெற்ற ஊழல்வாதி தலைவர்களை நாங்கள் சேர்க்க முடியாது. அன்வார் அதைப் புரிந்துகொள்வார் என்று நான் நம்புகிறேன்,” என்று லோக் கூறினார்.

#TamilSchoolmychoice

அண்மையில், சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட குரல் பதிவு குறித்து அன்வாரும், சாஹிட் ஹமிடியும் பகிரங்கமாக மறுத்தனர். இது குறித்து தாங்கள் காவல் துறையில் புகார் அளிக்க இருப்பதாக தெரிவித்தனர். ஆயினும், இது வரையிலும், இது தொடர்பாக அவர்கள் எந்தவொரு புகாரும் அளிக்கவில்லை.