Home One Line P1 ‘செத்தி கணவர், பிள்ளைகள் நிதி பெற்றது எனக்கு தெரியாது!’- மகாதீர்

‘செத்தி கணவர், பிள்ளைகள் நிதி பெற்றது எனக்கு தெரியாது!’- மகாதீர்

614
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 2018- ஆம் ஆண்டில் அரசாங்க ஆலோசனைக் குழுவில் (சிஇபி) முன்னாள் தேசிய வங்கி (பிஎன்எம்) ஆளுநர் செத்தி அக்தார் அசிஸை நியமித்தபோது, அவரது கணவரும் இரண்டு பிள்ளைகளும் 1எம்டிபியிலிருந்து நிதி பெற்றது குறித்து தமக்கு தெரியாது என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.

செத்தியின் அனுபவத்தையும், வங்கி அதிகாரியாக இருந்த செயல்திறனையும் அடிப்படையாகக் கொண்டு அவர் தேர்வு செய்யப்பட்டதாக மகாதீர் கூறினார்.

“எனக்குத் தெரியாது. ஆனால் செத்தி ஒரு வங்கி அதிகாரியாக மிகச் சிறந்த செயல்திறனைக் கொண்டிருந்தார். தேசிய வங்கி அதிகாரியாக, அவர் உலகம் முழுவதும் அறியப்பட்டவர். நான் பிரபலமான ஒருவரை நியமித்தேன். அவருடைய மகனைப் பற்றி என்னவென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், ஒரு தேசிய வங்கி அதிகாரி என்ற முறையில், அவர் எங்களுக்கு கிடைத்த மிகச் சிறந்த அதிகாரி,” என்று அவர் புதன்கிழமை மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

#TamilSchoolmychoice

மேலும் கருத்து தெரிவித்த மகாதீர், நஜிப் ரசாக் பிரதமராக இருந்ததிலிருந்து, தாம் செத்தியுடன் தொடர்பு கொண்டிருந்ததாகக் கூறினார்.

நஜிப்பின் வங்கிக் கணக்கில் அசாதாரண அளவு பணம் பற்றி செத்தி அறிந்திருந்ததாகவும், முன்னாள் பிரதமர் மீது நடவடிக்கை எடுக்க விரும்பியதாகவும் மகாதீர் கூறினார், ஆனால் இந்த திட்டம் செயல்படத் தவறிவிட்டது.

“உண்மையில், நஜிப் (பிரதமரானபோது), நான் செத்தியுடன் பேசினேன். என்னிடம் செத்தி, நஜிப் வங்கியில் நிறைய பணம் உள்ளது என்று கூறினார். அவர் நடவடிக்கை எடுக்க விரும்புவதாகக் கூறினார். அவர் முயன்றார். நஜிப் என்ன செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. நான்கு பேர் கொண்ட குழுவைப் பற்றி, காவல்துறை தலைவர் நஜிப்பிடம் கூறினார். சட்டத்துறை தலைவர் நீக்கப்பட்டார். நஜிப் அந்த நான்கு பேரை அழித்தார்,” என்று மகாதீர் கூறினார்.

அந்த நேரத்தில் இருந்த நான்கு மூத்த அரசு அதிகாரிகளான, சட்டத்துறை தலைவர் அப்துல் கனி படேல், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) தலைமை ஆணையர் அபு காசிம் முகமட், காவல்துறை தலைவர் காலிட் அபுபக்கர் மற்றும் செத்தி ஆகியோரை துன் மகாதீர் குறிப்பிட்டார்.

முன்னதாக இது தொடர்பாக நேற்று செத்தி கணவர் தௌபிக் காவல் துறையால விசாரிக்கப்பட்டர்.