Home One Line P1 செத்தி அசிஸ் கணவர் விசாரிக்கப்பட்டார்

செத்தி அசிஸ் கணவர் விசாரிக்கப்பட்டார்

874
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் தேசிய வங்கி ஆளுநர் செத்தி அக்தார் அசிஸின் கணவர் தௌபிக் அய்மானை நேற்று வியாழக்கிழமை காலை காவல் துறை விசாரித்ததாக தெரிவிக்கப்பட்டது.

தௌபிக்கின் வாக்குமூலத்தை, காவல் துறையின் வணிக குற்ற புலனாய்வுத் துறை மூன்று மணி நேரம் பதிவு செய்ததாக ஒரு வட்டாரத்தை மேற்கோள் காட்டி டிஎட்ஜ்மார்கெட்ஸ் செய்தித்தளம் செய்தி வெளியிட்டிருந்தது.

இதனை காவல் துறை உறுதிபடுத்தியதாக மலேசியாகினி தெரிவித்தது.

#TamilSchoolmychoice

“ஆம், அவர் ஒரு அறிக்கையை பதிவு செய்யவும், காவல் துறை விசாரணைக்கு உதவவும் அழைக்கப்பட்டார்,” என்று வணிக குற்ற புலனாய்வு துறை இயக்குனர் ஒரு குறுஞ்செய்தி மூலம் கூறியதாக அது கூறியது.

1எம்டிபி நிதியை தௌபிக்கும், அவரது மகனும் சிங்கப்பூரில் உள்ள நிறுவனத்திற்கு மாற்றிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக அழைக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.