68 வயதான குவான், கடந்த ஆண்டு டிசம்பர் 16- ஆம் தேதி செனட்டராக நியமிக்கப்பட்டார்.
“ஆமாம், அது உண்மை தான். நான் நாளை (ஏப்ரல் 16) காலை 11 மணிக்கு பதவியேற்பேன், ” என்று அவர் எப்எம்டியிடம் கூறினார்.
“இந்த திங்கட்கிழமையன்று எனக்கு பிரதமர் துறையிலிருந்து மின்னஞ்சல் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் அறிவிப்பு வந்தது. நிச்சயமாக, சபாவுக்கான எனது போராட்டத்திற்காக நான் அங்கீகரிக்கப்பட்டதாக நினைக்கிறேன். எனது புதிய கடமையில் நான் என்னால் முடிந்தவரை முயற்சிப்பேன், ” என்று அவர் கூறினார்.
கிழக்கு மலேசிய மாநிலத்தைச் சேர்ந்த ஒரு செனட்டர் இன்று துணை அமைச்சராக்கப்படுவார் என்ற ஊகங்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது.