Home One Line P1 வங்காளதேச தூதரகத்தின் நடவடிக்கை பொருத்தமற்றது!

வங்காளதேச தூதரகத்தின் நடவடிக்கை பொருத்தமற்றது!

742
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கோலாலம்பூரில் வங்காளதேச தூதரகம் மேற்கொண்ட நடவடிக்கையால் தாம் அதிர்ச்சியடைந்துள்ளதாக மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணன் தெரிவித்துள்ளார்.

கொவிட் -19 பாதிப்புக்கு மத்தியில் மலேசியாவில் வெளிநாட்டு தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பாக “சக்ரிர் கோஜ்” என்ற வலைத்தளம் பொதுமக்களை குழப்பமடையச் செய்யலாம் என்றும் அரசாங்கத்தின் முயற்சிகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தக்கூடும் என்றும் சரவணன் கூறினார்.

தனது அமைச்சுக்கு ஆலோசனை அல்லது அறிவிப்பு இல்லாமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“வெளிநாட்டு அரசதந்திர பிரதிநிதித்துவத்தின் நடவடிக்கைகளுக்கு இது பொருத்தமானதல்ல. வெளிநாட்டு தொழிலாளர்களின் வேலைவாய்ப்புத் தேவைகளைத் திட்டமிடுவதில் அரசாங்கத்தின் நோக்கங்களுக்கு முரணாகக் காணப்படும் வேலைவாய்ப்பு இணையதளங்களை வங்காளதேச தூதரகம் அறிமுகப்படுத்துவது பொருத்தமற்றது,” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை வங்காளதேச தூதரகம் வெளியிட்ட அறிக்கையின்படி, சக்ரிர் கோஜ் ஏப்ரல் 8- ஆம் தேதி மலேசியாவுக்கான தூதர் முகமட் கோலம் சர்வாரால் தொடங்கப்பட்டது.

ஆவணமற்ற ஆயிரக்கணக்கான வங்காளாதேசிகளுக்கு ​​வேலை கிடைப்பதற்கு உதவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. வேலை தேடும் நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதன் மூலமும், இடைத்தரகர்கள் இல்லாமல் பணியில் அமர்த்தவும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

“வங்காளதேச தூதரகத்தின் நடவடிக்கை, வங்காளதேசத்திலிருந்து சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்கள் நாட்டிற்குள் நுழைவதை ஊக்குவிக்கும். இது மறைமுகமாக சுரண்டலுக்கு வழிவகுக்கும். இது நாட்டிற்கு எதிர்மறையான பிம்பத்தை தரக்கூடும்,” என்று அவர் மேலும் கூறினார்.