Home One Line P1 மைக்ரோசாப்ட் நாட்டில் முதல் தரவு மையத்தை அமைக்கவுள்ளது

மைக்ரோசாப்ட் நாட்டில் முதல் தரவு மையத்தை அமைக்கவுள்ளது

438
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த ஐந்து ஆண்டுகளில் பெர்சாமா மலேசியா முன்முயற்சி மூலம் உள்ளடக்கிய மின்னியல் பொருளாதாரத்தை நிறுவ மலேசியா மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும்.

இன்று பெர்சாமா மலேசியாவை அறிமுகப்படுத்தியபோது பேசிய பிரதமர் மொகிதின் யாசின், இந்த முயற்சிக்கு குறைந்தபட்சம் 1 பில்லியன் அமெரிக்க டாலர் அல்லது 4 பில்லியன் ரிங்கிட் செலவாகும் என்றார்.

இது கடந்த மூன்று தசாப்தங்களில் மலேசியாவில் மைக்ரோசாப்ட்டின் மிக முக்கியமான முதலீடு என்று கூறப்படுகிறது. அந்நிறுவனம் தனது முதல் தரவு மையத்தை இந்நாட்டில் நிறுவ உள்ளது.