Home One Line P1 கொவிட்-19: நாடு திமிராக இருக்கக் கூடாது- அண்டை நாடுகளைப் பின்பற்ற வேண்டும்!

கொவிட்-19: நாடு திமிராக இருக்கக் கூடாது- அண்டை நாடுகளைப் பின்பற்ற வேண்டும்!

876
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தொற்றுநோயைக் கையாளும் மேற்கத்திய நாடுகளின் வழியை மலேசியா பின்பற்றக்கூடாது என்றும், அதற்கு பதிலாக அதனை வெற்றிகரமான கையாண்ட மூன்றாம் உலக நாடுகளின் உதாரணத்தை எடுத்துக் கொள்ளுமாறும் பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஜோமோ குவாமே சுந்தரம் கூறினார்.

மலேசியா திமிராக இருக்கக்கூடாது என்றும், தொற்றுநோயை நிர்வகிப்பதில் அதன் அருகிலுள்ள அண்டை ஏழை நாடுகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஜோமோ கூறினார்.

“உண்மையில், நாம் நம்மைத் தாழ்த்திக் கொள்ளவும், மற்ற நாடுகளின் அனுபவத்திலிருந்து, குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளிலிருந்து கற்றுக்கொள்ளவும் தயாராக இருக்க வேண்டும். வியட்நாம் நம்மை விட மிகவும் ஏழ்மையானது, லாவோஸ் ஆசியானில் ஏழ்மையான நாடு. (ஆனால்) அவர்கள் நம்மை விட வெற்றிகரமாக கையாண்டுள்ளார்கள். லாவோஸ் சீனாவின் எல்லையாக இருக்கிறது.

#TamilSchoolmychoice

“எனவே என்னைப் பொறுத்தவரை, நடைமுறை நடவடிக்கை அவசியம் (தொற்றுநோயைக் கையாள்வதில்),” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.