Home One Line P1 கொவிட்-19 தடுப்பூசி: இரண்டாம் கட்டத்தில் அரை மில்லியன் ஆசிரியர்கள் இணைவர்

கொவிட்-19 தடுப்பூசி: இரண்டாம் கட்டத்தில் அரை மில்லியன் ஆசிரியர்கள் இணைவர்

601
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட் -19 தடுப்பூசி செலுத்தும் இரண்டாம் கட்டத்தில் அரை மில்லியன் ஆசிரியர்கள் இணைக்கப்படுவார்கள்.

கொவிட் -19 தடுப்பூசி வழங்கல் அணுகல் உத்தரவாத சிறப்புக் குழு (ஜே.கே.ஜே.வி) ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், இரண்டாம் கட்ட தடுப்பூசிகளின் ஒரு பகுதியாக இருக்கும் என்றும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.

“நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் துறையில் சுமார் 500,000 ஆசிரியர்களுக்கு தடுப்பூசி போடப்படும்,” என்று கைரி கூறினார்.

#TamilSchoolmychoice

“தொற்றுநோய்க்கான ஆபத்து போன்ற பல அம்சங்களையும் காரணிகளையும் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது, குறிப்பாக பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்த அமைப்பில் சேர்க்க ஆசிரியர்களின் பட்டியலை கல்வி அமைச்சகம் தொகுத்து வருகிறது, ” என்று அவர் கூறினார்.