Home நாடு ஆஸ்ட்ரோ விழுதுகள் : மோகனா முனியாண்டி – காமாட்சி துரைராஜூ பங்கேற்கின்றனர்

ஆஸ்ட்ரோ விழுதுகள் : மோகனா முனியாண்டி – காமாட்சி துரைராஜூ பங்கேற்கின்றனர்

613
0
SHARE
Ad

கோலாலம்பூர் : ஆஸ்ட்ரோ விழுதுகள் சமூகத்தின் குரல் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பல்வேறு சமூக, அரசியல், வரலாற்று, பொருளாதார விவகாரங்கள் விவாதிக்கப்பட்டு, தொலைக்காட்சி இரசிகர்களிடையே அந்நிகழ்ச்சியும் அண்மையக் காலமாக பிரபலமாகி வருகிறது.

இன்று திங்கட்கிழமை (ஏப்ரல் 19) இரவு 9.00 மணிக்கு ஆஸ்ட்ரோ அலைவரிசை 201-இல் ஒளியேறும் ஆஸ்ட்ரோ விழுதுகள் சமூகத்தின் குரல் நிகழ்ச்சியில் “அரசியலில் பெண்களின் பங்கு” என்ற தலைப்பில் விவாதங்கள் முன்வைக்கப்படும்.

நிகழ்ச்சி நெறியாளர் ஈஸ்வரி பழனிசாமி நடத்தும் இன்றைய நிகழ்ச்சியில் ஜசெகவின் பகாங், சபாய் சட்டமன்ற உறுப்பினர் காமாட்சி துரைராஜூவும், மஇகாவின் முன்னாள் மகளிர் பகுதித் தலைவி மோகனா முனியாண்டியும் பங்கேற்று தங்களின் கருத்துகளை விவாதிக்கவிருக்கின்றனர்.