Home One Line P1 ஜோகூரில் 159 மாணவர்கள் கொவிட்-19 பரிசோதனை செய்ய உத்தரவு

ஜோகூரில் 159 மாணவர்கள் கொவிட்-19 பரிசோதனை செய்ய உத்தரவு

526
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: இங்குள்ள ஐந்து பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 159 மாணவர்கள் பாசிர் கூடாங் மற்றும் புக்கிட் இண்டாவில் உள்ள கொவிட் -19 பரிசோதனை மையத்தில் கொவிட் -19 தொற்று பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டனர்.

ஐந்து பள்ளிகளின் பெயர்கலை வெளியிடாமல், மாநில சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் குழுத் தலைவர் ஆர்.வித்யானந்தன், பள்ளிகளில் தொற்று மேலும் பரவாமல் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

#TamilSchoolmychoice

“பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட கொவிட் -19 சம்பவங்களின் எண்ணிக்கையில் ஜோகூரில் அதிகரித்துள்ளது.

“பெரும்பாலான சம்பவங்கள் வீட்டிலுள்ள குடும்ப நடவடிக்கைகள் காரணமாக உள்ளன. உறவினர்கள் உட்பட, அவர்கள் வீட்டிற்கு வந்தவர்கள், நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் மற்றும் விதிகளை பின்பற்றத் தவறிவிட்டனர்,” என்று அவர் கூறினார்.

நேற்று, ஜோகூரில் 387 புதிய கொவிட் -19 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.