Home நாடு நிக்கி லியோ: உயர் பதவி காவல் துறை அதிகாரி ஒருவரும் கைது

நிக்கி லியோ: உயர் பதவி காவல் துறை அதிகாரி ஒருவரும் கைது

552
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தப்பியோடிய தொழிலதிபர் நிக்கி லியோவுடனான உறவு தொடர்பாக கைது செய்யப்பட்ட பல காவல் துறை அதிகாரிகளில் உதவி காவல் துறை சூப்ரிதெண்டன் ஒருவரும் அடங்குவார் என்று ஜோகூர் காவல் துறைத் தலைவர் அயோப் கான் மைடின் பிச்சை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஜோகூர் வணிக குற்ற விசாரணைத் துறை நேற்று கோலாலம்பூரில் அதிகாரிகளை கைது செய்ததாக அயோப் கான் தெரிவித்தார். முழு சோதனை முடிந்ததும் அறிக்கை வெளியிடுவதாக அவர் கூறினார்.

“நான் கைது சம்பவங்களை உறுதிப்படுத்த விரும்புகிறேன், ஏனெனில் நடவடிக்கை இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. இதற்குப் பிறகு அதிகமான கைதுகள் இருக்கும், மேலும் இந்த நடவடிக்கையை நான் பாதிக்க விரும்பவில்லை, ” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

#TamilSchoolmychoice

காவல் படையினருக்குள் லியோவுக்கு தகவலறிந்தவர்கள் இருப்பது முன்னர் தெரியவந்தது. லியோவைக் கைது செய்வதை நோக்கமாகக் கொண்ட காவல் துறை நடவடிக்கை குறித்த தகவல்களை கசியவர்களில் முன்னாள் துணை அரசு வவழக்கறிஞரும் ஒருவர் என்று நம்பப்படுகிறது.