Home நாடு அவசரநிலை பிரகடனத்தை முடிக்கக் கோரும் குழுவை சந்திக்க மாமன்னர் ஒப்புதல்

அவசரநிலை பிரகடனத்தை முடிக்கக் கோரும் குழுவை சந்திக்க மாமன்னர் ஒப்புதல்

543
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் இன்று அவசரநிலை பிரகடனத்தை முடிக்கக் கோரும் குழுவை சந்திப்பதற்கு அனுமதி வழங்கி உள்ளார்.

இக்குழுவின் செய்தித் தொடர்பாளரான ஷா ஆலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சமாட்டுக்கு இன்று காலை இஸ்தானா நெகராவிலிருந்து ஒரு கடிதம் அனுப்பப்பட்டதாக குழுவுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

சந்திப்பு தீர்மானிக்கப்பட்ட தேதி மற்றும் நேரத்தில் நடைபெறும்.

#TamilSchoolmychoice

கடந்த செவ்வாய்க்கிழமை, முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் அமானா தலைவர் முகமட் சாபு மற்றும் காலிட் ஆகியோர் இஸ்தானா நெகாராவுக்கு இந்த விவகாரம் குறித்து சந்திக்க அனுமதி கோர விண்ணப்பித்திருந்தனர்.