Home நாடு நிக்கி லியோவுக்கு எதிராக சிவப்பு அறிவிப்பு வெளியீடு

நிக்கி லியோவுக்கு எதிராக சிவப்பு அறிவிப்பு வெளியீடு

533
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தப்பியோடிய தொழிலதிபர் நிக்கி லியோ சீ ஹீ மற்றும் அவரது சீன நாட்டு மனைவியைக் கண்டுபிடித்து கைது செய்ய இன்டர்போல் சிவப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக டத்தோ அயோப் கான் மைடின் பிச்சை இன்று தெரிவித்தார்.

ஜோகூர் காவல் துறைத் தலைவரான அயோப், கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 20) லியோவுக்கான சிவப்பு அறிவிப்பு வழங்கப்பட்டதாகவும், அவரது மனைவி நியூ டிஸிற்கான நேற்று அது வழங்கப்பட்டதாகவும் கூறினார்.

“இருவரும் இன்டர்போல் சிவப்பு அறிவிப்பு பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்,” என்று அவர் இன்று ஜோகூர் காவல் துறை தலைமையகத்தில் கூறினார்.