Home உலகம் இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் நீதிமன்றம் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை

இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் நீதிமன்றம் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கை

605
0
SHARE
Ad

sri-langka-and-vietnamஇலங்கை, ஏப்ரல் 19- இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் நீதிமன்றம் தொடர்பில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட உள்ளது.

இரு நாட்டு நீதிமன்றங்களுக்கும் இடையில் கூட்டுறவை ஏற்படுத்தும் வகையில் இந்த உடன்படிக்கை அமையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

வழக்குகள் மற்றும் சர்வதேச உடன்படிக்கைகள் தொடர்பில் நாடுகளுக்கு இடையிலான அனுபவங்களை பகிர்ந்து கொள்ள இந்த உடன்படிக்கை வழியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

குறிப்பாக கடல் வளப்பாதுகாப்பு, ஐக்கிய நாடுகள் பிரகடனங்கள் மற்றும் வர்த்தக பிணக்குகள் தொடர்பிலான சட்ட சிக்கல்கள் தொடர்பில் அனுபவங்கள் பகிர்ந்து கொள்ளப்படவுள்ளன.

இந்த உடன்படிக்கை விரைவில் கைச்சாத்திடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.