Home உலகம் இந்தோனிசிய நீர்மூழ்கிக் கப்பலின் பணியாளர்களை மீட்க 50 மணிநேரங்கள் மட்டுமே உள்ளது

இந்தோனிசிய நீர்மூழ்கிக் கப்பலின் பணியாளர்களை மீட்க 50 மணிநேரங்கள் மட்டுமே உள்ளது

663
0
SHARE
Ad

ஜகார்த்தா: காணாமல் போன இந்தோனிசிய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலின் 53 பணியாளர்களை வெளியேற்றுவதற்கு இன்னும் சுமார் 50 மணிநேரம் உள்ளது என்று கடற்படை தெரிவித்துள்ளது.

கே.ஆர்.ஐ.நங்கலா -402 கப்பல் புதன்கிழமை அதிகாலை பாலி கடற்கரையில் சுமார் 60 மைல் (100 கி.மீ) தொலைவில் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு போர்க்கப்பல்கள், ஒரு ஹெலிகாப்டர் மற்றும் 400 பேர் இந்த தேடலில் ஈடுபட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

சிங்கப்பூர் மற்றும் மலேசியா கப்பல்களை அனுப்பியுள்ளன. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகியவை உதவிகளை வழங்கியுள்ளன.

நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, மீண்டும் தகவல் அளிக்கத் தவறியது மற்றும் தொடர்பு இழந்தது என்று கடற்படை தெரிவித்துள்ளது.

“எங்களுக்கு எந்தப் பகுதி என்பது தெரியும், ஆனால் அது மிகவும் ஆழமானது,” என்று அட்மிரல் ஜூலியஸ் விட்ஜோஜோனோ தெரிவித்தார்.

ஆழமாக நீரில் மூழ்குவதற்கு அனுமதி வழங்கப்பட்ட பின்னர், நீர்மூழ்கிக் கப்பலுடனான தொடர்பு இழந்ததாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் போன கப்பல் இந்தோனிசியாவால் இயக்கப்படும் ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றாகும். இது 1970- களின் பிற்பகுதியில் தயாரிக்கப்பட்டது.