Home நாடு கொவிட்-19: தொற்று எண்ணிக்கை மே மாதத்தில் 5,000-ஆக உயரலாம்

கொவிட்-19: தொற்று எண்ணிக்கை மே மாதத்தில் 5,000-ஆக உயரலாம்

596
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் பின்பற்றப்படாவிட்டால், மலேசியாவில் கொவிட் -19 தொற்று நிலைமை நோன்பு பெருநாளின் போது ஒரு நாளைக்கு 3,000-ஆக மோசமடையும் என்று சுகாதார அமைச்சகம் கணித்துள்ளது.

அதன் சமீபத்திய கணிப்பு இந்த ஆண்டு மே மாத இறுதிக்குள் புதிய சம்பவங்கள் விகிதம் ஒரு நாளைக்கு 5,000- ஐ எட்டக்கூடும் என்பதைக் காட்டுகிறது.

மறுபுறம், நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டால், சம்பவங்களின் எண்ணிக்கை நோன்பு பெறுநாளின் போது ஒரு நாளைக்கு 500-ஆகக் குறைக்கலாம், பின்னர் மே மாத இறுதிக்குள் ஒரு நாளைக்கு சுமார் 300 சம்பவங்களாகக் குறைக்கப்படலாம்.

#TamilSchoolmychoice

சமீபத்திய சுகாதார அமைச்சின் வரைபடம் மலேசியாவில், கொவிட் -19- இன் தற்போதைய நிலையை “நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு இணங்காததை” காட்டுகிறது. அதனால், தொற்று விகிதம் 1.2 ஆக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது.

அதே நேரத்தில், “நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு இணங்கினால்” தொற்று விகிதம் 1.2 முதல் 0.8 வரை குறையும் என்று எதிர்பார்க்கிறது.