Home நாடு சட்டவிரோத குடியேறிகள் நான்கு துறைகளில் பணிப்புரிய அனுமதி

சட்டவிரோத குடியேறிகள் நான்கு துறைகளில் பணிப்புரிய அனுமதி

551
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சட்டவிரோத குடியேறிகளுக்கான தொழிலாளர் மறுசீரமைப்பு திட்டத்தில் நான்கு துறைகளின் துணை பிரிவுகளில் அவர்களை அமர்த்த முதலாளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சகம் மற்றும் மனிதவள அமைச்சகம் நடத்திய கூட்டு சந்திப்பின் போது இந்த முடிவு ஒப்புக் கொள்ளப்பட்டது.

அமைச்சர்கள் ஹம்சா சைனுடின் மற்றும் எம்.சரவணன் ஆகியோர், சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் உணவகத்தின் துணை பிரிவு, மொத்த மற்றும் சில்லறை துணை பிரிவு, துப்புரவு துணை பிரிவு மற்றும் சலவை, சரக்கு துணை பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கியதாக ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

“வழங்கப்பட்ட அனைத்து திட்டங்களையும், தகவல்களையும் செம்மைப்படுத்திய பின்னர், நான்கு துறைகளின் துணை பிரிவுகளில் முதலாளிகளுக்கு தொழிலாளர் மறுசீரமைப்பு திட்டத்தை திறக்க முடிவு செய்தது,” என்று ஹம்சா சைனுடின் கூறினார்.

விற்பனையாளர்கள் அல்லது மூன்றாம் தரப்பினரின் ஈடுபாடு இல்லாமல், தொழிலாளர் மறுசீரமைப்பு திட்டம் மற்றும் வருவாய் மறுசீரமைப்பு திட்டம் ஆகியவை கடந்த ஆண்டு நவம்பரில் செயல்படுத்தப்பட்டன.

கடுமையான சட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை சட்டப்பூர்வ வெளிநாட்டு தொழிலாளர்களாக ஒழுங்குபடுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.