Home இந்தியா தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்: ஸ்டாலினை தகுதி நீக்கம் செய்ய புகார்!

தமிழ் நாடு சட்டமன்றத் தேர்தல்: ஸ்டாலினை தகுதி நீக்கம் செய்ய புகார்!

434
0
SHARE
Ad

சென்னை: கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் ஸ்டாலினை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதே தொகுதியில் போட்டியிட்ட சுயேச்சை வேட்பாளர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார்.

அங்கு திமுகவினரால் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

”கடந்த 4-ஆம் தேதி அன்று கொளத்தூர் மேற்கு பகுதி திமுக செயலாளர் நாகராஜனின் திருட்டு போன இருசக்கர வாகனத்தில் இருந்து 2 இலட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அந்த பணம் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காகதான் வைக்கப்பட்டிருந்தது. வாக்காளர்களுக்கு திமுகவினர் பண பட்டுவாடா செய்திருப்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது,” என்று சுயேட்சை வேட்பாளர் விஜயகுமார் புகார் அளித்துள்ளார்.

#TamilSchoolmychoice

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலின் முடிவுகள் வரும் மே 2-ஆம் தேதி அறிவிக்கப்படும்.