Home கலை உலகம் ‘கர்ணன்’ வெற்றிக்குப் பிறகு, தனுஷ்- மாரி செல்வராஜ் மீண்டும் இணைகின்றனர்

‘கர்ணன்’ வெற்றிக்குப் பிறகு, தனுஷ்- மாரி செல்வராஜ் மீண்டும் இணைகின்றனர்

444
0
SHARE
Ad

சென்னை: கர்ணன் திரைப்பட வெற்றிக்குப் பிறகு நடிகர் தனுஷ்மற்றும் இயக்குனர் மாரிசெல்வராஜ் மீண்டும் இணைவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து நடிகர் தனுஷ் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு, மாரி செல்வராஜும் நானும் மீண்டும் கைகோர்க்கிறோம் என்று அறிவிக்க மகிழ்ச்சி. தயாரிப்பு பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்கும்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கர்ணன் திரைப்படம் ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் மலேசியா உள்ளிட்ட, திரையரங்குகளில் வெளியீடு கண்டது.

பரியேறும் பெருமாள் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜூவின் இரண்டாவது படம் “கர்ணன்”.