Home நாடு கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கம் அமைச்சர் சரவணனுக்கு நன்றி

கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கம் அமைச்சர் சரவணனுக்கு நன்றி

468
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சட்டவிரோத குடியேறிகளுக்கான தொழிலாளர் மறுசீரமைப்பு திட்டத்தில் நான்கு துறைகளின் துணை பிரிவுகளில், அவர்களை வேலையில் அமர்த்த அனுமதி வழங்கியது தொடர்பில் கோலாலம்பூர், சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் டத்தோ ஆர்.ராமநாதன் மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, உள்துறை அமைச்சகம் மற்றும் மனிதவள அமைச்சகம் நடத்திய கூட்டு சந்திப்பின் போது இந்த முடிவு ஒப்புக் கொள்ளப்பட்டது.

அமைச்சர்கள் ஹம்சா சைனுடின் மற்றும் எம்.சரவணன் ஆகியோர், சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் உணவகத்தின் துணை பிரிவு, மொத்த மற்றும் சில்லறை துணை பிரிவு, துப்புரவு துணை பிரிவு மற்றும் சலவை, சரக்கு துணை பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கியதாக ஒரு கூட்டு அறிக்கையில் தெரிவித்திருந்தனர்.

#TamilSchoolmychoice

இது குறித்து பேசிய ராமநாதன்,” உணவகம், மொத்த, சில்லறை வியாபாரம், மற்றும் சரக்கு தொழில் சார்ந்த தொழில்களுக்கு இந்த அனுமதி வழங்கியதற்கு நன்றி. நாங்கள் இதற்காக நீண்ட காலமாகக் காத்திருந்தோம். இந்த முடிவினால் பல வியாபாரங்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. பாதுகாப்பு நிறுவனங்கள், முடி திருத்தும் கடைகள் போன்றவை இந்த திட்டத்தின் கீழ் இடம்பெறவில்லை. கூடுமான வரையில், இந்த தொழில்களுக்கும் இந்த அனுமதி வழங்கப்படவேண்டும். இதனை சற்று கருத்தில் கொள்ளுங்கள்,” என்று கூறினார்.

விற்பனையாளர்கள் அல்லது மூன்றாம் தரப்பினரின் ஈடுபாடு இல்லாமல், தொழிலாளர் மறுசீரமைப்பு திட்டம் மற்றும் வருவாய் மறுசீரமைப்பு திட்டம் ஆகியவை கடந்த ஆண்டு நவம்பரில் செயல்படுத்தப்பட்டன.

கடுமையான சட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை சட்டப்பூர்வ வெளிநாட்டு தொழிலாளர்களாக ஒழுங்குபடுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.