வடிவேலு நடிப்பில் அவர் இயக்கிய கடைசிப் படம் ‘மாமன்னன்’ வசூல் ரீதியாகும் வெற்றி பெற்றது. பாராட்டு விமர்சனங்களையும் சந்தித்தது. அதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் தன் சிறுவயது அனுபவங்களைக் கொண்டு உருவாக்கியிருக்கும் படம் ‘வாழை’. இதுவரையில் படத்தைப் பார்த்தவர்கள் மாரி செல்வராஜின் இயக்கத்தைப் பாராட்டியிருக்கிறார்கள்.
இயக்குநர் மணிரத்னமும் மாரி செல்வராஜை மிகவும் பாராட்டியிருக்கிறார். ‘வாழை’ எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் 23-ஆம் தேதி உலகம் எங்கும் வெளியாகிறது. அதிக எதிர்பார்ப்போடு இரசிகர்களும் காத்திருக்கின்றனர்.
வாழை படத்தின் முன்னோட்டத்தை யூடியூப் தளத்தில் கீழ்க்காணும் இணைப்பில் காணலாம்: