Home Photo News அன்வார், புதுடில்லி வாழ் மலேசியர்களுடன் கலந்துரையாடல்

அன்வார், புதுடில்லி வாழ் மலேசியர்களுடன் கலந்துரையாடல்

295
0
SHARE
Ad

புதுடில்லி – இந்தியாவுக்கான தனது அதிகாரத்துவ வருகையின் ஒரு பகுதியாக, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று புதன்கிழமை (ஆகஸ்ட் 21) புதுடில்லியில் இந்தியாவில் வசிக்கும் மலேசியர்களையும், அரசாங்க ஊழியர்களையும் சந்தித்துக் கலந்துரையாடல் நடத்தினார்.

அந்த சந்திப்புக் கூட்டத்தில் அன்வாருடன் சென்ற மலேசியக் குழுவினருடன் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமட் ஹாசானும் கலந்து கொண்டார். மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரனும் அந்த சந்திப்புக் கூட்டத்தில் பங்கெடுத்தார்.

இந்தியாவில் வசிக்கும் மலேசியர்களுக்கு நடப்பு அரசாங்கத்தின் கொள்கைகளையும், டீசல் உதவித் தொகை திட்டத்தின் மூலம் நாடும் மக்களும் எவ்வாறு பயனடைய முடியும் என்பது குறித்தும் விளக்கியதாக அன்வார் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

டீசல், பெட்ரோல் உதவித் தொகைத் திட்டமானது மக்கள் ஆதரவுக்காக அறிவிக்கப்பட்ட திட்டமல்ல – மாறாக, நாட்டைக் காப்பாற்ற திறமையுடனும் துணிவுடனும் முன்னெடுக்கப்பட்ட திட்டம் என்றும் அன்வார் குறிப்பிட்டார்.

“மலேசியாவின் நடப்பு பொருளாதார சூழ்நிலை நாளுக்கு நாள் வலிமை பெற்று வருவதை, புள்ளிவிவர இலாகாவின் தரவுகளும், பேங்க் நெகாராவின் அண்மைய ஆய்வுகளும் காட்டுவதாகக் கூறிய அன்வார், நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.9 விழுக்காடாக, எதிர்பார்த்ததை விட கூடுதல் வளர்ச்சியடைந்துள்ளதாவும் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் முன்வைத்த கேள்விகளுக்கும் அன்வார் பதிலளித்தார்.