Home நாடு 67 விழுக்காட்டினர் மொகிதின் யாசின் தலைமையில் திருப்தி

67 விழுக்காட்டினர் மொகிதின் யாசின் தலைமையில் திருப்தி

400
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தீபகற்ப மலேசியாவில் 67 விழுக்காடு மக்கள் பிரதமராக மொகிதின் யாசின் தலைமையில் திருப்தி அடைந்துள்ளதாக மெர்டேகா மையம் நடத்திய கருத்துக் கணிப்பு கண்டறிந்துள்ளது.

கடந்த ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுக்கு இடையில் மொகிதினுக்கு 74 விழுக்காடு ஆதரவு இருந்த நிலையில், அதுவே உயர்ந்ததாக இருந்தது. மிகக் குறைந்த நிலை ஜனவரி மாதத்தில் 63 விழுக்காடாக இருந்தது.

சீனர்களில் 30 விழுக்காட்டினரும், இந்தியர்கள் 66 விழுக்காடினரும் அவரது தலைமைத்துவத்திற்கு வாக்களித்துள்ளனர். ஏராளமான மலாய்க்காரர்கள் (83 விழுக்காடு) மொகிதினை ஆதரிக்கின்றனர்.

#TamilSchoolmychoice

மார்ச் 31 முதல் ஏப்ரல் 12 வரை மெர்டேகா மைய ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 64 விழுக்காடு மலாய்க்காரர்கள், 28 விழுக்காடு சீனர்கள் மற்றும் எட்டு விழுக்காடு இந்தியர்கள் உட்பட 2,111 பேர் பங்குக் கொண்டனர்.