Home நாடு கொவிட்-19: சரவாக் தனது மக்களுக்காக சொந்தமாக தடுப்பூசி வாங்க அனுமதி

கொவிட்-19: சரவாக் தனது மக்களுக்காக சொந்தமாக தடுப்பூசி வாங்க அனுமதி

477
0
SHARE
Ad

கூச்சிங்: கொவிட் -19 தடுப்பூசியை தனது மக்களின் பயன்பாட்டிற்காக வாங்க வேண்டும் என்ற சரவாக் மாநில அரசின் கோரிக்கைக்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்று துணை முதல்வர் டத்தோ அமர் டக்ளஸ் உக்கா எம்பாஸ் தெரிவித்தார்.

சரவாக் மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் (ஜேபிபிஎன்) தலைவரான உக்கா, சமீபத்தில் புத்ராஜெயாவில் தேசிய கொவிட் -19 நோய்த்தடுப்புத் திட்ட ஒருங்கிணைப்பு அமைச்சர் கைரி ஜமாலுடினுடன் சந்தித்ததைத் தொடர்ந்து இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

இதுதொடர்பாக, கொவிட்-19 சரவாக் ஆலோசனைக் குழுவுக்கு அந்த நோக்கத்திற்காக தடுப்பூசி நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

#TamilSchoolmychoice

“எனவே நாங்கள் இப்போது சம்பந்தப்பட்ட தரப்புகள் மற்றும் அமைப்புகளுடன் கலந்துரையாடி வருகிறோம். இதனால் கோலாலம்பூரிலிருந்து விநியோக சிக்கல் இருந்தால், இந்த தடுப்பூசிகளை வாங்குவதால் அது சரி செய்யப்படும்,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மார்ச் 18-ஆம் தேதி, மாநிலத்திற்கு கொவிட் -19 தடுப்பூசியை வாங்குவதற்கான சரவாக்கின் நோக்கம் குறித்து சரவாக் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியதாக உக்கா கூறியதாக தெரிவிக்கப்பட்டது.