Home உலகம் இந்தியாவிற்கு ராணுவ ஆயுதங்கள் விற்பனை செய்வதை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

இந்தியாவிற்கு ராணுவ ஆயுதங்கள் விற்பனை செய்வதை அதிகரிக்க அமெரிக்கா திட்டம்

658
0
SHARE
Ad

america-flaqவாஷிங்டன், ஏப்ரல் 19- கடந்த 2008-ம் ஆண்டு முதல், இந்தியாவிற்கு ராணுவத் தளவாடங்கள் விற்பனை செய்த வகையில், அமெரிக்க நிறுவனங்கள் முன்னேற்றத்தையும், அதிகப் பொருள்வரவையும் அடைந்துள்ளன.

இந்த நிலை, வரும் வருடங்களில் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அமெரிக்க அரசின் அரசியல் மற்றும் ராணுவத்துறை அதிகாரி ஒருவர், நேற்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசின், அரசியல் மற்றும் ரானுவத்துறையின், துணைக்காரியதரிசியாகப் பணிபுரிபவர் ஆண்ட்ரூ ஷப்பிரோ. இவர் கடந்த 2008-ம் ஆண்டு முதல், இந்தியாவிற்கு ராணுவ ஆயுதங்கள் விற்பனை செய்தது, 8 கோடி அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

போர் விமானங்கள் விற்பனையில், பிரான்ஸ் நாட்டிடம் விட்டுக்கொடுத்தது வருத்தத்தை அளித்தபோதிலும், ஆயுதங்கள் விற்பனையில் தாங்கள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்க பாதுகாப்புத்துறையின் துணை அதிகாரியான ஆஷ்டன் கார்ட்டர், இந்த விற்பனையில் நல்ல முன்னேற்றத்தை அடைந்துள்ளதாகவும், மேலும், இதனை அதிகரிப்பது குறித்து நம்பிக்கை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்ட அவர், எதிர்கால விற்பனைத் திட்டங்கள் குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.