Home கலை உலகம் ஆஸ்கார்: ‘நோமட்லேண்ட்’ சிறந்த படம், கிளோவி ஜாவோ சிறந்த இயக்குனர்

ஆஸ்கார்: ‘நோமட்லேண்ட்’ சிறந்த படம், கிளோவி ஜாவோ சிறந்த இயக்குனர்

1033
0
SHARE
Ad
படம்: இயக்குனர் கிளோவி ஜாவோ

ஹாலிவுட்: “நோமட்லேண்ட்” சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருதைப் பெற்றது. “நோமட்லேண்ட்” இயக்குனர் கிளோவி ஜாவோவும் சிறந்த இயக்குநருக்கான விருதை தட்டிச் சென்றார்.

2017- ஆம் ஆண்டில் வெளிவந்த புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட “நோமட்லேண்ட்”, பெர்ன் (பிரான்சஸ் மெக்டார்மண்ட்) என்ற பெண் தொடர்பான கதையாகும். இந்த திரைப்படம் இடம் விட்டு இடம் சென்று வாழ்பவர்களின் நிஜ வாழ்க்கையைப் பிரதிபலித்துள்ளது.

படம்: பிரான்சஸ் மெக்டார்மண்ட்

இந்த பாத்திரத்தை ஏற்று நடித்த சிறந்த மெக்டார்மண்ட் சிறந்த நடிகைக்கான விருதை  வென்றார்.

#TamilSchoolmychoice

கிளோவி ஜாவோ சிறந்த இயக்குனரை வென்ற முதல் வெள்ளையர் அல்லாத பெண்மணி ஆவார். கிளோவி ஜாவோ  “நோமட்லேண்ட்” படத்திற்காக சிறந்த இயக்குனர் விருதைப் பெற்று, முதல் ஆசிய பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.