Home நாடு இந்தாண்டு அம்னோ கட்சித் தேர்தலை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

இந்தாண்டு அம்னோ கட்சித் தேர்தலை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

575
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இந்த ஆண்டு அம்னோ, கட்சித் தேர்தலை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த சமிக்ஞையை நேற்று நடைபெற்று முடிந்த உச்சமன்றக் கூட்டம் வழங்கியது.

அடுத்த ஜூன் மாதம் நடைபெறவுள்ள கட்சியின் தேர்தல் குறித்து ஆலோசனை பெற சங்கப் பதிவாளர் மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றத்திற்கு கடிதம் எழுதுவதாக அம்னோ தலைமைச் செயலாளர் அகமட் மஸ்லான் தெரிவித்தார்.

விதிகள் மற்றும் சட்டங்களுக்கு உட்பட, நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கு ஏற்ப தேர்தல் செயல்முறையை உறுதி செய்வதாக அகமட் கூறினார்.

#TamilSchoolmychoice

“அம்னோ அரசியலமைப்பு மற்றும் கொவிட்-19 தொற்று தொடர்பான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளின்படி இந்த ஆண்டு அம்னோ கட்சித் தேர்தல்களை எவ்வாறு நடத்துவது என்பது குறித்த ஆலோசனைகளையும் வழிகாட்டுதல்களையும் பெற சங்கப் பதிவாளர் இயக்குநர் மற்றும் தேசிய பாதுகாப்பு மன்றம் இயக்குநருக்கு ஒரு கடிதத்தை அனுப்பவும் இன்றைய கூட்டம் முடிவு செய்தது.

“மகளிர், இளைஞர் மற்றும் புத்ரி பிரிவுகள் உட்பட அம்னோ கிளைக் கூட்டங்களை உள்ளடக்கிய கட்சித் தேர்தல் செயல்முறை, நாடு முழுவதும் உள்ள 191 தொகுதிகளில் மொத்தம் 3.3 மில்லியன் உறுப்பினர்களை உள்ளடக்கியது. இது திறம்பட மற்றும் சுமூகமாக நடத்தப்பட வேண்டும், ”என்று அகமட் மஸ்லான் கூறினார்.