Home நாடு மின்னல் வானொலி : “செய்திப் பிரிவில் பணியாற்றுபவருக்கு கொவிட் தொற்றால் செய்திகள் இடம் பெறவில்லை”

மின்னல் வானொலி : “செய்திப் பிரிவில் பணியாற்றுபவருக்கு கொவிட் தொற்றால் செய்திகள் இடம் பெறவில்லை”

897
0
SHARE
Ad

கோலாலம்பூர் : வழக்கமாக மின்னல் பண்பலை வானொலியின் அலைவரிசையில் இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 30) இரவு 9.00 மணிக்கு தமிழ் செய்திகளை ஏன் ஒலியேற்றவில்லை என்பதற்கான விளக்கத்தை மின்னல் வானொலி நிர்வாகம் அறிவித்தது.

மின்னல் வானொலியின் செய்திப் பிரிவில் பணியாற்றும் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று கண்டதால், செய்திகளின் தயாரிப்பும், ஒலியேற்றமும் தடைப்பட்டதாக மின்னல் வானொலி தெரிவித்தது.

அடுத்த அறிவிப்பு வெளிவரும் வரை வானொலி செய்திகள் தற்காலிகமாக இடம் பெறாது என்றும் இதுகுறித்த விளக்கத்தை வானொலி அறிவிப்பாளர்கள் அறிவித்து வருகின்றனர் என்றும் மின்னல் வானொலி நிருவாகம் வருத்தத்துடன் குறிப்பிட்டது.

#TamilSchoolmychoice

எதிர்பாராத இந்த நிலைமையால்தான் தமிழ் செய்திகள் ஒலியேறவில்லை என்றும் இதனால் ஏமாற்றமடைந்த இலட்சக்கணக்கான வானொலி நேயர்களுக்கு தங்களின் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதாகவும் மின்னல் வானொலி தெரிவித்தது.