Home நாடு ஐஜிபி-உள்துறை அமைச்சர் மோதல் வெளிச்சத்துக்கு வந்தது

ஐஜிபி-உள்துறை அமைச்சர் மோதல் வெளிச்சத்துக்கு வந்தது

639
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இதுநாள் வரையில் இலைமறை காயாக இருந்து வந்த காவல் துறைத் தலைவருக்கும் (ஐஜிபி) – உள்துறை அமைச்சருக்கும் இடையில் நிலவி வந்த உள்குத்துப் போராட்டங்கள் நேற்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 30) பகிரங்கமாக வெளிச்சத்துக்கு வந்தது.

காவல் துறைத் தலைவராக தனது இறுதி பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினார் பதவி விலகிச் செல்லும் டான்ஸ்ரீ அப்துல் ஹாமிட் பாடோர். அப்போது பகிரங்கமாக அவர் உள்துறை அமைச்சர் ஹம்சா சைனுடினைச் சாடினார்.

புதிய காவல் துறைத் தலைவராக டத்தோஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி நியமிக்கப்பட்டிருப்பது நேற்று காலையில்தான் தனக்கு தெரிய வந்ததாக ஹாமிட் பாடோர் கூறினார்.

#TamilSchoolmychoice

இறுதி நேரம் வரை அவரின் நியமனம் தனக்குக் கூட தெரியாமல் மறைக்கப்பட்டது என்றும் ஹாமிட் பாடோர் தெரிவித்தார்.

“அக்ரில் என்னிடம் தனது நியமனம் குறித்துத் தெரிவித்தார். உள்துறை அமைச்சும், அமைச்சர் ஹம்சா சைனுடினும் அவர்களின் நியமனத்தை யாராவது குறுக்கிட்டுத் தடுத்துவிடுவார்கள் என அஞ்சுகிறார்கள் போலும்.

மே 3-ஆம் தேதிதான் தான் பதவி விலகுவதால் அன்றைய தினத்தில்தான் புதிய காவல் துறை நியமனம் செய்யப்படும் என தான் எதிர்பார்த்ததாகவும் ஹாமிட் பாடோர் மேலும் தெரிவித்தார்.