Home இந்தியா தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் இறுதி நிலவரம் : திமுக: 159 – அதிமுக: 75

தமிழ்நாடு தேர்தல் முடிவுகள் இறுதி நிலவரம் : திமுக: 159 – அதிமுக: 75

836
0
SHARE
Ad

சென்னை: தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் திமுக கூட்டணி இறுதி நிலவரமாக 159 சட்டமன்றத் தொகுதிகளில் வாகை சூடியிருக்கிறது. அதிமுக கூட்டணி 75 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

தமிழகத்தின் 234 தொகுதிகளையும் இரு கூட்டணிகளில் இடம் பெற்ற கட்சிகள் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

திமுக தனித்து 133 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. காங்கிரஸ் 18 தொகுதிகளிலும், மதிமுக 4 தொகுதிகளிலும், சிபிஎம் 2 தொகுதிகளிலும் சிபிஐ 2 தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 4 தொகுதிகளிலும், வெற்றி பெற்றிருக்கின்றன.

#TamilSchoolmychoice

பாமக 5 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது. அதிமுக தோல்விக்கு முக்கியக் காரணமாக பாமகவின் பின்னடைவு பார்க்கப்படுகிறது. அதிமுக கூட்டணியிலேயே அதிகமாக 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது பாமகவுக்குத்தான்.

மேலும் வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடாக 10.5 விழுக்காடு ஒதுக்கப்பட்ட அறிவிப்பும் வன்னியர்களின் வாக்கு வங்கியைக் கவரும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் 23 தொகுதிகளில் 5 தொகுதிகளில் மட்டுமே பாமக வெற்றி பெற்றிருக்கிறது.

அதே போல 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட பாஜக 16 தொகுதிகளை இழந்து 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது. பாஜகவும், பாமகவும் இழந்த தொகுதிகளை திமுக பெரும்பாலும் கைப்பற்றியிருக்கிறது.

பாமகவுக்கும், பாஜகவுக்கும் ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் அதிமுக நேரடியாகப் போட்டியிட்டிருந்தால் மேலும் சில தொகுதிகளைக் கூடுதலாகக் அதிமுக கைப்பற்றியிருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகின்றது.

கட்சிகள் தனித் தனியாக வெற்றி பெற்ற தொகுதிகளின் வரைபடத்தைக் கீழே காணலாம். இது இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வரைபடமாகும். எனவே தனிச் சின்னங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சிகள்தான் பட்டியலிடப்பட்டிருக்கின்றன.