Home இந்தியா மேற்கு வங்காளம் : மம்தா பானர்ஜி மே 5-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்கிறார்

மேற்கு வங்காளம் : மம்தா பானர்ஜி மே 5-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்கிறார்

963
0
SHARE
Ad

கொல்கத்தா : மேற்கு வங்காள சட்டமன்றத் தேர்தல்களில் மொத்தமுள்ள 292 தொகுதிகளில் இதுவரையில் வெளியிடப்பட்ட முடிவுகளின்படி திரிணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளிலும், பாஜக 77 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கின்றன.

மற்ற கட்சிகள் இரண்டு தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருக்கின்றன.

இதனைத் தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் ஆட்சி அமைக்கும் உரிமையை மாநில ஆளுநரிடம் மம்தா பானர்ஜி கோரியிருக்கிறார். ஆளுநர் அவரை ஆட்சி அமைக்க அழைத்திருப்பதைத் தொடர்ந்து எதிர்வரும் மே 5-ஆம் தேதி மம்தா பானர்ஜி மேற்கு வங்காள முதல்வராகப் பதவியேற்கிறார்.

#TamilSchoolmychoice

அதிர்ச்சி தரும் வகையில் மம்தா பானர்ஜி அவரது சொந்த நந்திகிராம் சட்டமன்றத் தொகுதியில் தோல்வி அடைந்திருக்கிறார். இருந்தாலும் அந்தத் தொகுதியில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடைபெற வேண்டும் என மம்தா தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இந்திய சட்டத்தின்படி ஒருவர் சட்டமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும் அந்த மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்க முடியும். ஆனால், பதவியேற்ற  6 மாத காலத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்.

அதன்படி, மம்தா மேற்கு வங்காளத்தின் முதலமைச்சராகப் பதவியேற்ற பின்னர் சட்டமன்ற இடைத் தேர்தல் ஒன்றில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.