“தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மகத்தான வெற்றிப்பெற்று புதிய முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், கலைஞரின் இளவல், எமது அன்பு சகோதரர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! வளரட்டும் தமிழகம், தொடரட்டும் கலைஞரின் சகாப்தம்!” என சரவணன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.
மேலும் தமிழகம் செல்லும் போதெல்லாம் ஸ்டாலினை நேரடியாகச் சந்திப்பதையும், நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையும் சரவணன் வழக்கமாகக் கொண்டிருந்தார்.