Home இந்தியா ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர பணிக்கு மாற்றிய தமிழக அரசு

ஒப்பந்த செவிலியர்களை நிரந்தர பணிக்கு மாற்றிய தமிழக அரசு

613
0
SHARE
Ad

சென்னை: தமிழகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த 1,212 செவிலியர்கள் நிரந்தர பணிக்கு மாற்றப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொவிட்-19 தொற்று காரணமாக மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமடைந்ததை அடுத்து, தமிழக அரசு ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்கள் பலரை தொடர்ந்து பணியமர்த்தி வந்தது.

இந்நிலையில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவந்த 1,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் நிரந்த பணிக்கு மாற்றப்படுவதாக அது கூறியது.

#TamilSchoolmychoice

பணி நிரந்தரம் செய்யப்பட்ட 1,212 செவிலியர்கள் மே 10- ஆம் தேதிக்கு முன் பணியில் இணைய வேண்டும்.