கோலாலம்பூர்: 15-வது பொதுத் தேர்தலில் பெர்சாத்து போட்டியிடும் இடங்களிலெல்லாம் அம்னோ போட்டியிட்டால் அது தோல்வியடையும் என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகமட் தெரிவித்துள்ளார்.
“அனைத்து இடங்களிலும் அம்னோ போட்டியிடும் என முகமட் ஹாசன் கூறும்போது, அம்னோ அவர்களுடன் இல்லாதபோது பெர்சாத்து தோற்கும் என்று நான் நினைக்கிறேன்,” என்று அவர் மலேசியா போஸ்ட் செய்தி தளத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.
மார்ச் மாதம், பெர்சாத்து தலைவர் மொகிதின் யாசின், பொதுத் தேர்தலில் அம்னோ இடங்களை விட்டுக்கொடுப்பதை சகித்துக் கொள்ள விரும்பவில்லை என்றால், கடந்த தேர்தலில் கட்சி போட்டியிட்ட அனைத்து இடங்களையும் பாதுகாக்கும் என்று சூசகமாக தெரிவித்திருந்தார்.
அம்னோ இனி அவர்களுடன் இல்லாதபோது, அடுத்த பொதுத் தேர்தலில் கட்சி தோல்வியடையும் என்பதை அறிந்தததால், பெர்சாத்து தலைவர்கள் தங்கள் அம்னோவிற்கு திரும்பும்படி அறிவுறுத்தியுள்ளதாக மகாதீர் கூறினார்.
இருப்பினும், அவர்கள் அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் பதவிகளை விரும்பியதாலும், அரசாங்கத்தில் பதவிகளை வகித்ததன் விளைவாக அவர்கள் அனுபவித்த பணத்தாலும் அவர்கள் மறுத்துவிட்டதாக அவர் கூறினார்.
“அடுத்த தேர்தலில் நீங்கள் இழப்பீர்கள் என்று சொன்னேன், ஏனென்றால் அம்னோ உங்களை ஆதரிக்கவில்லை. எனவே வந்த இடத்திற்கே செல்வது நல்லது.
“ஆனால், அவர்கள் அமைச்சர்கள் என்றும் அமைச்சர்களுக்கு மாதம் 70,000 ரிங்கிட் சம்பளம் இருப்பதாகவும் அவர்கள் சொன்னார்கள்,” என்று மகாதீர் கூறினார்.