Home இந்தியா திமுக அமைச்சரவை : புதிய அமைச்சர்கள் பட்டியல்

திமுக அமைச்சரவை : புதிய அமைச்சர்கள் பட்டியல்

748
0
SHARE
Ad

சென்னை : நாளை வெள்ளிக்கிழமை (மே 7) காலை 9.00 மணியளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்கவிருக்கும் நிலையில் புதிய அமைச்சர்களுக்கான பட்டியலும் வெளியிடப்பட்டிருக்கிறது.

133 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் திமுக ஆட்சி அமைக்கிறது. பதவியேற்புக்குப் பின்னர் நாளை மாலை 4.00 மணிக்கு முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

  • தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பொது நிர்வாகம், இந்திய ஆட்சிப்பணி, காவல், மாவட்ட வருவாய் அலுவலர்கள், சிறப்பு திட்ட செயலாக்கம், மாற்று திறனாளிகள் நலன் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • அன்பில் மகேஷ் பள்ளிக் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திமுகவின் முன்னாள் பெரும் தலைவர்களில் ஒருவரான அன்பில் தர்மலிங்கத்தின் பேரனாவார். உதயநிதி ஸ்டாலினுக்கும் இவர் நெருக்கமான அரசியல் சகாவாகக் கருதப்படுகிறார்.
  • பொதுப்பணி அமைச்சராக எ.வ.வேலு நியமனம் பெற்றுள்ளார்.
  • கயல்விழி செல்வராஜூவுக்கு ஆதி திராவிடர் அமைச்சுப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் தாராபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளரும் தமிழ் நாடு பாஜக தலைவருமான எல்.முருகனைத் தோற்கடித்தவராவார்.
  • வீட்டு வசதித் துறை அமைச்சராக முத்துசாமி பொறுப்பேற்கிறார்.
  • போக்குவரத்து அமைச்சராக ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் நியமனம் பெற்றுள்ளார்.
  • சேகர்பாபு அறநிலையத் துறை அமைச்சராகிறார்.
  • சுற்றுலாத் துறை அமைச்சராக மதிவேந்தன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
  • நிதியமைச்சராக பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மதுரை மத்திய தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அமெரிக்காவில் தொழில்நுட்பத் துறையில் உயர்கல்வி பெற்றவர். இவரின் தந்தையார் பிடிஆர்.பழனிவேல் திமுக ஆட்சியில், கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, சட்டமன்ற அவைத் தலைவராக பதவி வகித்துள்ளார்.
  • காட்பாடி தொகுதியில் கடும் போட்டியில் வெற்றி பெற்ற துரை முருகனுக்கு நீர்வளத் துறை அமைச்சு ஒதுக்கப்பட்டுள்ளது.
  • திருச்சி மேற்கு தொகுதியில் வெற்றி பெற்ற கே.என் நேரு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • கூட்டுறவுத் துறை அமைச்சராக ஐ.பெரியசாமி பொறுப்பேற்கிறார்.
  • உயர்கல்வித் துறை அமைச்சராக க.பொன்முடி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றவராவார்.
  • எம்.ஆர்.பன்னீர்செல்வம், வேளாண்மை, உழவர் நலத்துறை அமைச்சராகப் பதவியேற்கிறார்.
  • கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,  வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார்.
  • தங்கம் தென்னரசு, தொழில்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • எஸ்.ரகுபதி – சட்டத்துறை அமைச்சர்
  • முத்துசாமி – வீட்டு வசதித்துறை அமைச்சர்
  • கே.ஆர்.பெரியகருப்பன் – ஊரக வளர்ச்சித் துறை
  • தா.மோ.அன்பரசன் – ஊரகத் தொழிற்துறை
  • மு.பெ.சாமிநாதன் – செய்தித்துறை
  • பி.கீதா ஜீவன் – சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை
  • அனிதா ராதாகிருஷ்ணன் – மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை
  • கா.ராமச்சந்திரன் – வனத்துறை
  • சக்கரபாணி – உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை
  • வி.செந்தில் பாலாஜி – மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
  • ஆர்.காந்தி – கைத்தறி மற்றும் துணிநூல் துறை
  • மா.சுப்பிரமணியன் – மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை
  • பி.மூர்த்தி – வணிகவரி மற்றும் பதிவுத்துறை
  • எஸ்.எஸ்.சிவசங்கர் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
  • சா.மு.நாசர் – பால்வளத்துறை
  • செஞ்சி கே.எஸ்.மஸ்தான் – சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை
  • சிவ.வீ.மெய்யநாதன் – சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை
  • சி.வி.கணேசன் – தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத்துறை
  • த.மனோ தங்கராஜ் – தகவல் தொழில்நுட்பத்துறை