Home இந்தியா மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்

மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார்

474
0
SHARE
Ad

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவியேற்றார். அதனை அடுத்து அவரது தலைமையில் அமைச்சரவையும் இன்று பதவியேற்றது.

திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் வைகோ, கே.எஸ்.அழகிரி, முத்தரசன், ஜவாஹிருல்லா, ஈஸ்வரன், பால கிருஷ்ணன், வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கலந்து கொண்டார். மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனும் தனது கட்சி நிர்வாகிகளுடன் கலந்து முதல்வரின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

இன்று காலை 9.10 மணியளவில் மு.க.ஸ்டாலினுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.