Home நாடு வெறுமனே வெளிநாட்டினரை பரிசோதிப்பதை நிறுத்த உத்தரவு!

வெறுமனே வெளிநாட்டினரை பரிசோதிப்பதை நிறுத்த உத்தரவு!

585
0
SHARE
Ad

கோலாலம்பூர்: காவல் துறை அதிகாரிகள் வெளிநாட்டவர்களை சீரற்ற முறையில் சோதனை செய்வதைத் தடுக்கும் தடை உத்தரவை பிறப்பிப்பதாக காவல் துறை தலைவர் அக்ரில் சானி தெரிவித்தார்.

ஒரு சில அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் தங்கள் அதிகாரங்களை துஷ்பிரயோகம் செய்வதைத் தடுப்பதற்காகவே இது செய்யப்படும் என்று அக்ரில் கூறினார்.

“இந்தச் செயலை உடனடியாக நிறுத்த நான் ஓர் உத்தரவை வெளியிடுவேன். ஒரு நியாயமான காரணமின்றி அவர்களை (வெளிநாட்டவர்கள்) தோராயமாக சோதிக்கிறார்கள்.

#TamilSchoolmychoice

“அதுமட்டுமல்லாமல், குடிநுழைவுத் துறையால் அனுமதிக்கப்பட்ட கடப்பிதழ்கள் அல்லது ஆவணங்கள் உண்மையானதா இல்லையா என்பதை உறுதிப்படுத்தியதன் அடிப்படையில் காவல்துறையினர் அவர்களை இரண்டு வாரங்கள் தடுப்புக் காவலில் தடுத்து வைக்க முடியாது,” என்று அவர் பெர்னாமாவிடம் நேற்று இரவு தெரிவித்தார்.

இதுபோன்ற நடைமுறைகளும் கலாச்சாரமும் காவல்துறையினரால் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய வழிவகுக்கும் என்று அக்ரில் சானி கூறினார்.