Home நாடு கொவிட்-19: தொடர்ந்து 2-வது நாளாக 4,500-ஐ தாண்டிய தொற்றுகள் – மரணங்கள் 25

கொவிட்-19: தொடர்ந்து 2-வது நாளாக 4,500-ஐ தாண்டிய தொற்றுகள் – மரணங்கள் 25

703
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (மே 8) வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் பதிவான மொத்த கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக அதிர்ச்சி தரும் வகையில் 4,519  என்ற எண்ணிக்கையைத் தொட்டன.

இதைத் தொடர்ந்து இதுவரையில் நாட்டில் மொத்தம் பதிவான தொற்றுகளின் எண்ணிக்கை 436,944 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த ஒரு நாளில் மரண எண்ணிக்கை 25-ஐ தொட்டிருக்கிறது. நேற்று 22 ஆக இருந்த மரண எண்ணிக்கை இன்று மீண்டும் அதிகரித்திருக்கிறது. இதைத் தொடர்ந்து இதுவரையிலான மொத்த மரண எண்ணிக்கை 1,657 ஆக உயர்ந்திருக்கிறது.

#TamilSchoolmychoice

மொத்தம் பதிவான 4,519 தொற்றுகளில் 4,514 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும்.  5 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.

இதற்கிடையில் கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் மட்டும் 2,719 ஆக இருந்தது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 398,723 ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 36,564 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 393 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 210 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.

மிக அதிகமான தொற்றுகளை சிலாங்கூர் மீண்டும் பதிவு செய்தது. 1,722 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்தது. கோலாலம்பூர் அடுத்த நிலையில் 557 தொற்றுகளைப் பதிவு செய்தது.

479 தொற்றுகளை சரவாக் மாநிலம் பதிவு செய்திருக்கிறது.