Home உலகம் கொவிட்-19: மே 16 முதல் சிங்கப்பூரில் கூடுதல் கட்டுப்பாடுகள்

கொவிட்-19: மே 16 முதல் சிங்கப்பூரில் கூடுதல் கட்டுப்பாடுகள்

485
0
SHARE
Ad

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் கொவிட்-19 பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கு நாளை (மே 16) முதல் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படுகின்றன.

சாங்கி விமான நிலைய பகுதியில் 46 பேர் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதேபோல் பிற பகுதிகளிலும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதத்திற்கு பிறகு பதிவு செய்யப்பட்ட அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். இதனை கருத்தில் கொண்டு வரும் ஞாயிறு முதல் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அதன்படி, வெளியில் செல்ல இரண்டு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். வயதானவர்கள் உடனடியாக கொவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இதுவரை 61,000 பேருக்கு கொவிட்-19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 31 பேர் பலியாகி உள்ளனர்.