ஜோகூர் பாரு: “கெராஜாஹான் காகால் (தோல்வியுற்ற அரசு)” பதாகைக்கு முன்னால் தீப்பிழம்புகள் எரித்ததாக நம்பப்படும் 20 இளைஞர்களை பத்து பகாட் காவல் துறை கைது செய்துள்ளனர்.
அவர்கள் 16 முதல் 28 வயதுக்குட்பட்ட உள்ளூர்வாசிகள் என்றும், திங்கட்கிழமை (மே 17) வரை நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
நோன்பு பெருநாள் (மே 13) முதல் நாள் அதிகாலை 2 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததை பத்து பகாட் மாவட்ட காவல் துறைத் தலைவர் இஸ்மாயில் டோல்லா இன்று ஓர் அறிக்கையில் உறுதிப்படுத்தினார்.
இது ஜோகூரில் ஜாலான் பத்து பகாட் சாலையில் நடந்தது. இந்த நிகழ்வின் காணொலிகள் பின்னர் சமூக ஊடகங்களில் பரலாகியுள்ளது.
“40 பேர் அடங்கியதாக மதிப்பிடப்பட்ட இக்குழு, மற்ற மோட்டார் பயனர்களை 15 நிமிடங்கள் சாலையைப் பயன்படுத்துவதைத் தடுத்தும், அவர்களின் கவனத்தை ஈர்க்கவும் தங்கள் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களைப் பயன்படுத்தி ஒரு தடுப்பை அமைத்திருந்தனர். பின்னர் அவர்கள் ‘கெராஜாஹான் காகால்’ என்று ஒரு பதாகையை பயன்படுத்தி, பட்டாசுகளையும் வெடித்தனர்.
“இது வரை, இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்று நம்பப்படும் 20 பேரை காவல் துறை கைது செய்துள்ளனர். பதாகையை உருவாக்கி தொங்கவிட்டு, எரியூட்டியவர்கள் உட்பட, சம்பவ இடத்தில் இருந்த ம் பட்டாசுகளையும் காவல் துறை பறிமுதல் செய்துள்ளனர்,” என்று இஸ்மாயில் கூறினார்.