Home நாடு கொவிட்-19 : மரண எண்ணிக்கை 44 ஆக உயர்ந்தது – புதிய தொற்றுகள் 4,140

கொவிட்-19 : மரண எண்ணிக்கை 44 ஆக உயர்ந்தது – புதிய தொற்றுகள் 4,140

596
0
SHARE
Ad

noor-hisham-health-min-07072020கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை (மே 15) வரையிலான ஒருநாளில்  கொவிட் தொற்றுகளின் காரணமான மரண எண்ணிக்கை 44-ஆக உயர்ந்துள்ளது. நேற்று 34 ஆக இருந்த மரண எண்ணிக்கை இன்று 44 ஆக உயர்ந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இதுவரையிலான மரண எண்ணிக்கை 1,866 ஆக உயர்ந்துள்ளது.

இன்று நண்பகல் வரையிலான ஒருநாளில் தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 4,140 ஆக தொடர்ந்து அதிக எண்ணிக்கையில் இருந்து வருகிறது. தொடர்ந்து 4-வது நாளாக கொவிட்-19 தொற்றுகள் எண்ணிக்கை 4 ஆயிரத்துக்கும் அதிகமாகப் பதிவாகியிருக்கின்றன.

#TamilSchoolmychoice

இதற்கு முன்னர் ஜனவரி 31-ஆம் தேதி 5,298 தொற்றுகள் பதிவாயின. இதுவே  மலேசிய வரலாற்றில் மிக அதிகபட்ச தொற்றுகளின் எண்ணிக்கையாகும்.

4,140 புதிய தொற்றுகளைத் தொடர்ந்து நாட்டில் இதுவரையில் பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 466,330 என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மொத்தம் பதிவான 4,140 தொற்றுகளில் 9 தொற்றுகள் வெளிநாடுகளில் இருந்து பரவியதாகும். எஞ்சிய 4,131 தொற்றுகள் அனைத்தும் உள்நாட்டிலேயே பரவியதாகும்.

கடந்த ஒரு நாளில் தொற்றுகளில் இருந்து விடுபட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,432 ஆகும். இதனைத் தொடர்ந்து இதுவரையில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமானவர்களின் மொத்த எண்ணிக்கை 422,329 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் தற்போது மருத்துவமனைகளில் 42,135 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 503 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களில் 272 பேர் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மாநிலங்கள் ரீதியாக மிக அதிகமான தொற்றுகளைக் கொண்ட மாநிலமாக சிலாங்கூர் 1,507 தொற்றுகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.

433 தொற்றுகளுடன் ஜோகூர் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மற்ற மாநிலங்கள் வாரியான தொற்றுகளின் எண்ணிக்கையை மேற்காணும் வரைபடத்தில் காணலாம்.