Home நாடு சரவாக் : மாநிலத் தேர்தலுக்குத் தயாராகிறது

சரவாக் : மாநிலத் தேர்தலுக்குத் தயாராகிறது

574
0
SHARE
Ad

கூச்சிங் : கொவிட்-19 பாதிப்புகளுக்கும் மத்தியில் சரவாக் மாநிலம் சட்டமன்றத் தேர்தல்களை நடத்துவதற்குத் தயாராகி வருகிறது.

சரவாக் மாநிலத்துக்கான சட்டமன்றத்துக்கான தவணை இந்த ஆண்டு ஜூன் 7-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 2016-ஆம் ஆண்டு சரவாக் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்று முதல் சட்டமன்றக் கூட்டம் ஜூன் 6, 2016-இல் நடைபெற்றது.

அந்த நாளிலிருந்து 5 ஆண்டுகள் கணக்கிட்டால் இந்த ஆண்டு ஜூன் 7-ஆம் தேதியோடு சரவாக் சட்டமன்றத்திற்கான தவணை முடிவடைகிறது. அந்த தேதியிலிருந்து அடுத்த 60 நாட்களுக்குள் மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.

#TamilSchoolmychoice

எனினும் தற்போது ஆகஸ்ட் 1 வரை அவசரகாலச் சட்டம் அமுலில் இருப்பதால், சரவாக் மாநில முதலமைச்சர் டத்தோ பத்திங்கி அபாங் ஜோஹாரி விரைவில் மாமன்னரைச் சந்தித்து எப்போது சரவாக் சட்டமன்றத்தைக் கலைக்கலாம் என்பது குறித்து ஆலோசனை பெறுவார். இந்தத் தகவலை ஜிபிஎஸ் எனப்படும் காபுங்கான் பார்ட்டி சரவாக் கூட்டணியின் தலைமைச் செயலாளர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி (படம்) தெரிவித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து மாமன்னர், சரவாக் மாநில ஆளுநருடன் கலந்தாலோசித்து நிர்ணயிக்கும் தேதி ஒன்றில் சரவாக் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.